பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/112

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


1 1 0 3. மாணவர்கள் பயிற்சியை செய்கிற போது, ஆசிரியர் அருகிருந்து உதவ வேண்டும். 4. மாணவர்கள் பிறரை கலாட்டா செய்யாமல், கேலிபண்ணிக் குழப்பாமல், வகுப்பை கட்டுப்பாட்டுடன் நிர்வகிக்க வேண்டும். 5. மாணவர்களை சிறுகுழுக்களாகப் பிரித்து, ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு தலைவரை நியமித்து, பயிற்சி செய்யுமாறு பணிக்க வேண்டும். ஆனால் கஷ்டமான பயிற்சி யின் போது, ஆசிரியர் அவசியம் அருகில இருக்க வேண்டும். 6. ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சிகள் செய்கிற சாதனங்கள் பழுதில்லாமல் இருக்கின்றனவா என்று பார்த்துக் கொள்ள வேண்டும் 7. எல்லா மாணவர்க்கும் வாய்ப்பு வருவது போல் வகுப்பை நிர்வாகித்துக் கற்றுத் தரவேண்டும். 8. எந்த நேரத்திலும் விழுதல், கை கால் பிடிப்புகள், போன்றவைகள் நடக்கக் கூடும் என்பதால், முதலுதவிப் பெட்டியும் அவசியம். 9. முடியாத மாணவர்களை கட்டாயப் படுத்துவதோ, வலிந்து செய்ய வற்புறுத்துவதோ, தவறான அணுகு முறையாகும். 8. தற்காப்புக் கலைகள் திடீரென்று அல்லது திட்டமிடப் பட்டு, தன் மேல் நிகழப்போகின்ற ஆபத்துக்களை, தன்னம்பிக்கையான ஆற்றலுடன், தடுத்துக் காத்துக் கொள்கின்ற திறமைமிகு செயல்களையே தற்காப்புக் கலைகள் என்று அழைக் கின்றனர்.