பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/114

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


குறிப்பு : 112 நிற்கும் நிலை என்பது, உடலை சமநிலையாக வைத்துக் கொள்வது. கால்கள் முன்னும் பின்னும், இருபுறமும் பக்க வாட்டில் விரைந்து இயங்குவது போல் கால்களை இயல்பாக வைத்து நின்று: எதிரியை ஒரு கையால் குத்துவதற்காக முன்புறம், மற்றொரு கையை எதிரியின் தாக்குதலைத் தடுத்து கொள்வதும் போன்ற முறையில் வைத்திருப்பதே, நிற்கும் நிலையாகும். இயங்குதல் என்பது கால்களின் இயக்கம் (Footwork) gossaṁsör Qužsib (Arm movement) egy Gib. கைசளும் கால்களும் சேர்ந்து திறமையாக இணைந்து செயல்படுமாறு (Coordination) கற்பிக்க வேண்டும். தனித்தனியாக ஒவ்வொருவருக்கும் தாக்கும் முறை களையும், தடுக்கும் திறன்களையும் (Blow and Block) கற்பித்த பிறகு, ஜோடி ஜோடியாக மாணவர்களைப் பிரித்து, பழகச் செய்யுதல் தாக்கும் கலை, தடுக்கும் கலை இரண்டிலும் தேர்ச்சி பெற நுணுக்கங்களைக் கற்பித்தல். நன்கு பயிற்சி பெற்றவர்களை, போட்டியில் பங்கு பெறத்தக்க நுணுக்கத்தையும், தைரியத்தையும் ஊட்டுதல். கைகளில் துணியால் கட்டுப்போட்டு கையுறைகள் மாட்டாமல்; வாயில் தடுப்புப் பொருள் (Mouth Piece) வைக்காமல், சண்டை செய்ய அனுமதிக்கக் கூடாது.