பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/116

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


114 மல்யுத்தத் திறன்கள் 1. எதிரியைப் பிடித்து வீழ்த்தக் கூடிய வகையில் நிற்கும் நிலை. அதாவது எந்த நிலையிலும் சமநிலை இழந்துபோய்விடாத வண்ணம், தரையில் உறுதியாக நிற்கும் நிலை. 2. எதிரியின் கைகளை, கால்களைப் பிடிக்கும் முறை (Holds) 3. எதிரியின் மேல் பிடி போடுவதுபோல: அவர் போடுகிற பிடிக்கு எதிர்ப்பிடி (Counter) போடுதல். 4. எதிரியின் பிடியிலிருந்து விடுபடுதல். (Escapes) 5. எதிரி திமிறி வெளிவராதபடி, இடுக்கிப் பிடி போட்டு, தரையில் அழுத்துதல். (Pinning) கற்பிக்கும் முறை ஆசிரியர் மாணவர்களுக்கு, ஒவ்வொரு திறமையாக முதலில் விளக்கி, செயல்முறையில் செய்துகாட்ட வேண்டும். இந்தக் கலையில் அறிமுகமான மாணவர்களை, சிறுசிறு குழுவாகப் பிரித்த பிரிவுக்கு தலைவர்களாக வைத்துக் கற்றுத்தரச் செய்ய வேண்டும். இதற்கு பகுதி கற்பிக்கும் முறை பயன்படும். மாணவர்கள்கோபப்படக்கூடிய சூழ்நிலை ஏற்படுவதை, ஆசிரியர் தவிர்க்க வேண்டும். தடுக்க வேண்டும். மல்யுத்தப் போட்டிக்கென்று, சில முன்னோடிப் Luosi fossir (Lead up Activity) a-siv().