பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/135

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

133

3. இருக்கின்ற ஆடுகள வசதி, உதவி சாதனங்கள் (Play ground & Equipment)

4. போட்டி நடத்துகிற விளையாட்டின் தன்மை (Type of game)

5. ஆட்ட அதிகாரிகள் எண்ணிக்கையின் அளவு (Officials)

6. போதிய பொருளாதாரத்தைப் பொறுத்து (Finance)

இனி, ஒவ்வொரு வகை தொடர்போட்டிப் பந்தயத்தை நடத்த, போட்டி நிரல் (Fixtures) தயாரிக்கும் முறையினை யும், அதற்கான எடுத்துக்காட்டு மூலம் அறிந்து கொள்வோம்.

1. ஒரு வாய்ப்புப் போட்டி முறை (Single Knock out or Single Elimination)

இதை நீக்குமுறை போட்டி என்றும் கூறுவார்கள்.

இந்த ஒரு வாய்ப்புப் போட்டித் தொடரில், பங்கு பெறுகின்ற குழுக்கள், ஒரு முறை தோற்றுப் போனாலே, போட்டியிலிருந்து இடமிழந்துபோகின்றன. மீண்டும் ஆட வாய்ப்பே அதற்கு கிடையாது. கிடைக்காது.

இந்தப் போட்டியில் பங்கு பெறுகின்ற குழுக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, போட்டி ஆட்டங்களின் எண்ணிக்கையும் அமையும்.

உதாரணமாக, 12 குழுக்கள் போட்டியில் பங்கு பெறுகின்றன என்றால், நடக்கின்ற போட்டி ஆட்டங்கள் 11 என்று அமையும்.

இதற்கான சூத்திரம் n-1 என்பது. N என்றால் Number of Teams என்பது அர்த்தம்.