பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/229

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


18. விளையாட்டுச் சுற்றுலா (GAMES TOURS) பள்ளிகளில் அல்லது கல்லூரிகளில் தான், மாணவர் களுக்கான விளையாட்டுச் சுற்றுலாவை, ஏற்பாடு செய்து, நடத்திட முடியும். சுற்றுலாவுக்கான பணச் செலவு மற்றும் விடுமுறை நாட்கள் பற்றி, முன்கூட்டியே திட்டமிட்டு நடத்துகிற போது தான், சுற்றுலா சுகமாகவும், சுமுகமாகவும் அமையும். சுற்றுலா வெற்றிக்கு, சில குறிப்புக்கள் 1. சுற்றுலாவுக்கு எந்த இடத்திற்குப் போகிறோம் எந்த நாளில் புறப்படுகிறோம் ? எவ்வளவு நாட்கள் எவ்வளவு பணம் செலவாகும் எண்றெல்லாம் முதலில் திட்ட மிடல் வேண்டும். 2. செலவு முழுவதையும் பள்ளி ஏற்றுக் கொள் கிறதா ? பகுதி செலவை ஏற்கிறதா ? மாணவர்களே முழுமையாக ஏற்றுக் கொள்கிறார்களா என்பதையெல் லாம், முன்னதாகவே, திட்டமிட்டுத் தீர்மானிக்க வேண்டும்.