பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/32

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


30 இடம் பார்த்து மகிழும் இயக்கம் (Hiking); விளையாட்டு விழாக்கள்; குடியுரிமைப் பயிற்சி (Citizenship training). சுகாதாரக் கண்காட்சி இயக்கம் போன்றவற்றைக் கூறலாம். மாணவ மாணவியர், தாங்களே நேராக இத்தகைய இயக்கங்களில் பங்கு பெறும் போது, பல் வேறு விதமான கருத்துக்களையும், பாங்கான அறிவினையும் பெறும் வாய்ப்பு மிகுதி பெறுகிறது. 3. கேட்டு கண்டறிய உதவும் பொருட்கள். உலகை அறிந்திட உதவுவது நம் ஐம்புலன்களே. அரிய சக்தி படைத்த ஐம்புலன்களே, அறிவை வளர்த்திட துணை புரிகின்றன. கேட்டு கண்டறிய உதவும் துணைப் பொருட்கள், கற்பதில் விரைவாகத் தேர்ச்சிபெற, மிகு தியாக உதவு கின்றன. இந்தத் துணைப் பொருட்கள், அறிவு நிறைய பெற உதவுமே அன்றி, ஆசிரியரே தேவையில்லை என்ற அளவுக்கு மாற்றிவிட முடியாது. மாணவர்க்கு இந்தத் துணைப் பொருட்கள், நல்லதைக் கற்றுத் தரவே அமைந்திடவேண்டும். காண்பவர்க்குக் களிப் பூட்டுகின்ற இந்தத் துணைப் பொருட்கள், மாணவர்கள் மனதை வழிமாற்றிட அல்ல என்பதை நாம் புரிந்து கொண்டு, தகுந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். - நமக்கு சாதகமாக இருக்கவும், புரிந்து கொள்ளவும், கேட்டுக் கண்டறிய உதவும் துணைப் பொருட்களை 5 வகை யாகப் பிரிக்கலாம்.