பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/34

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


3.2 5. பொதுவான (நிலையான) துணைப் பொருட்கள் 1. நாடகம் நடித்தல், (பாவனை செய்தல்) 2. புத்தகங்கள்; தின, оитт, மாதாந்திர பத்திரிக்கைகள், துண்டு வெளியீடுகள்; பத்திரம் போன்ற மூல ஆவணங்கள். கேட்டு அறிவதை விட, பார்த்து பெறும் அறிவு பெரும் பயன் பயக்கும். ஒரு சித்திரத்தை ஆயிரம் வார்த்தைகளைக் கொண்டு விளக்குவதை விட, நேரில் ஒரு முறை காட்டினாலே போதும், நிறைய விஷயங்களை அறிந்து கொள்ள முடியும், இந்தக் கருத்தை மனதிற்கொண்டு, ஆசிரியர் மேற்கூறிய துணைப் பொருட்களை , மிகுதியாகப் பயன்படுத்த வேண்டும். அப்பொழுது, ஆசிரியர் எதிர்பார்க்கும் கற்றல் விளைவுகளை, மிகஎளிதாக மாணவர்களிடம் பெறமுடியும். ஒரு சாதனையையே நிகழ்த்த முடியும்.