பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/56

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


54 இவ்வளவு வசதிகளையும், வாய்ப்புக்களையும், வரை முறைகளையும் வகுத்து வழங்குகிற, பாடம் தயார் செய்யும் திட்டத்தில், முக்கியமான சில குறிப்புக்கள் இடம் பெற்றாக வேண்டும்; பாடம் தயார் செய்தலில் சில குறிப்புக்கள் 1. நடத்தப்போகிற பாடத்தின், முக்கிய நோக்கமும், இலக்கும் அந்தப் பாடத் தயாரிப்பில் இடம் பெற்றிருக்க வேண்டும். 2. பாடத் தயாரிப்பானது, சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப வளைந்து கொடுக்கின்ற தன்மையில் அமைய வேண்டும். 3. எல்லா வயதினருக்கும் ஏற்றாற்போல பாடத் தயாரிப்பும் குறிப்பும் அமைந்திருப்பதுடன், அந்தப் பாடம், புரிகிற தன்மையில், பொருள் பொதிந்த தாகவும் விளங்க வேண்டும். 4. பாடத்தைப் போதிக்கிற போது, அதில் முன்னேற்றம் விளைகிற அளவில், தெரிகிற தன்மையிலும் அது அமைந்திடல் வேண்டும். 5. மாணவர்கள் பாடத்தைப் புரிந்து கொண்டு பயிற்சி பெறவும், முயற்சி செய்யவும் கூடிய அளவில், இருக்க வேண்டும். இனி, பாடத் தயாரிப்பு அமைவதை, 4 பிரிவாகட் ஜிரித்துப் பார்க்கலாம்.