பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/474

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. நீண்ட வாழ்வு, இளமை, நல்ல உடல் நலம் யாவும். முதுகெலும்புத் தண்டின் வளையக் கூடிய நெகிழ்வினால் கிடைக்கிறது. ஆசனங்கள் முதுகெலும்பினை அவ்வாறு உருவாக்கும் ஆற்றலைக் கொண்டிருக்கிறது. 22. யோகாசனங்கள் எப்படி உருவாக்கப் பட்டிருக்கின்றன? உலகத்தில் வாழ்கின்ற உயிரினங்களான, மிருகங்கள், பறவைகள், பூச்சியினங்கள் போன்றவற்றின் தேக அமைப்பு களைப் போலவே, யோகாசன அமைப்புகள் உருவாக்கப் பட்டி ருக்கின்றன. அத்தகைய அமைப்புகளின் படி, சிறப்பாக ஆசனம் செய்கிறவர்கள். மேலும் மேலும் மேன்மையான பயன்களைப் பெற்று மகிழ்வார்கள். 23. ஆசனங்களை ஏன் எல்லா நாட்டு மக்களும் விரும்பு கிறார்கள்? யோகாசனங்கள் விஞ்ஞான முறையிலான செயல்பாடுகளில் அமைத்து, உடலில் உள்ள உள்ளுறுப்புகள் மட்டுமின்றி, வெளியுறுப்புக் களையும் நுண்மையுடனும், வலிமையுடனும் உழைப் பதற்காக உதவி உற்சாகப் படுத்துவதால் தான், எல்லா நாட்டு மக்களும், எல்லாத் தரப்பு மக்களும் விரும்பி செய்கிறார்கள். 24. யோகா என்றால் என்ன? 輯 யோகா என்ற சொல். யுஜ் என்ற சமஸ்கிரு ச் சொல்லிலிருந்து பிறந்தது. யுஜ் என்ற சொல்லுக்கு கட்டுதல், இணைத்தல், பிணைத்தல் என்பது பொருள். மனிதனுடைய விருப்பத்தையும் (will), கடவுளுடைய விருப்பத்தையும் இணைக்கும் பாலமாக, யோகாசனம் அமைந்திருக்கிறது. 25. யோகாவின் முக்கிய நோக்கம் என்ன? உடலாலும், அறிவாலும், ஒழுக்கத்தாலும், இறைபண்புகளாலும் ஒருவரை, முழு மனிதராக மாற்றுவதே யோகாவின் முக்கிய நோக்கமாகும். 26. பிராணாயாமம் என்றால் என்ன? இதன் பயன்கள் யாவை? பிராணாயாமம் என்னும் சொல். பிராணன் + அய்மம் என்று பிரிகிறது. பிராணன் என்றால் மூச்சு வாழ்க்கை, காற்று, சக்தி என்பதாகவும். அப்பம் என்றால் நீளமான விரிவான, நீட்டுதலான என்றும் பொருள் உண்டு. ஆக, பிராணாயாமம் என்றால் மூச்சைக் கட்டுதல் என்று பொருளாகும். தாளலயம் போல சுவாசத்தைக் கட்டுப்படுத்துகிற போது. ஒருவரின் மனதிலே அமைதியும், மனதுக்கு இதமும் கிடைக்கிறது. பிராணயாமம் செய்வதன் மூலம் ஒருவர் நெடுநாட்கள் வாழ முடிகிறது. jbaᏬ© நினைவாற்றலை வளர்ப்பதுடன், மனக்கவலைகளையும், மனக்கோளாறுகளையும் இது தீர்த்து வைக்கிறது. G笠