பக்கம்:உடற்கல்வி-உடல்நலப் பாடநூல்-6ம் வகுப்பு-12ம் வகுப்பு.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. முதல் எண்ணிக்கைபடி வா. 4. தொடக்க நிலைக்கு வா. l. இடது காலை, ஒரடி முன்புறமாக வைத்து. 2. வலது காலை இடது கால் இருக்கும் இடத்திற்கு நேராக சரியாகக் கொண்டு வந்து வைக்கிற போது, கைகளையும் சரியாக இரு பக்கவாட்டிலும் வைத்து, நிமிர்ந்து நிற்கவேணடும். - 4. வணக்கம் செய்தல் : (Saluting) (கொடி) வணக்கம் செய்வதை, இரு எண்ணிக்கை முறையில் செய்யலாம். 1. வலது கையை வட்டவடிவானதாக, நெற்றிக்கருகே கொண்டுவந்து, உள்ளங்கை தெரிய, விரல்களை விரித்து, வலது கணினுக்கு மேற்புறமாக, கட்டுவிரல், நடுவிரல், மோதிரவிரல் மூன்றும் இருப்பது போல், வணக்கம் செய்யவும். அதே சமயத்தில் முழங்கை, மணிக்கட்டுப்பகுதி, விரல் பகுதிகள் எல்லாம், ஒரு நேர்கோட்டில் இருப்பது போல, விறைப்பாக வைத்திருக்க வேண்டும்.