பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/15

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

13


செய்தல் மற்றும் வேறுபல திறமிக்கச் செயல்களாகும். அவற்றில் சிறார்களை மகிழ்ச்சியுடன் பயிற்சிபெற வைத்து, சண்டையிடுவதில் மகா சமர்த்தர்களாக மாற்றினான். அதுவே அவனது வெற்றியின் அருமையான ரகசியமாக அமைந்திருந்தது.

சைப்ரஸ் ஆட்சிக் காலத்திற்குப் பிறகு, அவன் பாரசீகத்தில் பின்பற்றிய உடற்கல்வி முறைகளைப் போலவே, ஸ்பார்ட்டா நாட்டினரும் பின்பற்றினர், பெரிதும் பயன் பெற்றனர்.

இளம் சிறார்களை பொதுத் தங்குமிடத்திற்கு (Barracks) அழைத்துச்சென்று, தங்க வைத்து, தாண்டல், ஒடுதல், மல்யுத்தம் செய்தல், கனமான எடைகளைத் துக்கியெறிதல், போன்ற பயிற்சிக் கலைகளில் தேர்ச்சிப் பெறச்செய்து, போரிடும் ஆற்றல் மிக்க வீரர்களாக மாற்றிடும் வகையில் உடற்கல்வியை உபயோகப்படுத்தி னர்.

கிரேக்க நாட்டில் மற்றொரு கீர்த்திமிக்கக் குறு நாடான ஏதென்சும், பாரசீகமும் ஸ்பார்ட்டாவும் பின் பற்றிய உடற்கல்வி முறையிலிருந்து, சற்று விலகி, மக்களை ஆட்படுத்தினர். ஏதென்சு நாட்டின் தத்துவம் ஏற்றமுள்ளதாகவே அமைந்திருந்தது.

ஏதென்சு நாட்டினரின் உடற்கல்வி முறை வழியாக அமைந்த இலட்சிய வாழ்வு, அழகும் நளினமும், வாழ்வின் தெளிவான மனப்பாங்கையும் வளர்ப்பதிலே தான் முனைப்பாக இருந்தது.

ஏதென்சினர் வாழ்க்கை, வீரம் நிறைந்ததாக இருந்ததோடு, சுதந்திர வாழ்வும சுகந்தரும் வழியுமாகவே