பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/238

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
236
உடற்கல்வி என்றால் என்ன?

ஆர்வத்திற்குப் பரிசும், பணமும், புகழும் பாராட்டும் உதவுகிறது என்றாலும், அதற்காக, சக்திக்கு மீறி அவர்களை வற்புறுத்தி ஈடுபடுத்தவே கூடாது.

மேலே கூறிய அத்தனைத் துண்டும் சாதனங்களும், வயது வரம்புக் கேற்றவாறு வித்தியாசப்படுகின்றன என்பதையும் கற்பிப்பவர்கள் மறந்துவிடக் கூடாது.

5. தனிப்பட்ட ஒருவரின் செயல் முறையானது, எந்த அளவுக்குத் தொடர வேண்டும், எந்த அளவிலே நிறுத்த வேண்டும் என்பதை அறிந்து கொண்டு தான் தொடர வேண்டும்.

ஒரு காரியத்தில் திருப்தி நிலை என்ற ஒன்று உண்டு. அந்தத் திருப்தி நிலையை அறிந்து கெள்ளும் ஆற்றலை, உடற்கல்வியும் விளையாட்டுக்களும் வழங்குகின்றன.

6.அடிப்படை சிறப்பு செயல்களை (Motor skills) நன்கு வளர்ப்பதுடன், அதன் மூலம் சிறப்பான திறமைகளை வளர்ப்பது தான் உடற்கல்வியின் சிறப்புச் செயலாக விளங்குகிறது. அப்படிப்பட்ட முறைகளே, கற்பதில் தெளிவையும் வலிவையும் ஊட்டி உற்சாகப்படுத்துகின்றன.

(அ) என்ன காரியம் செய்யப்போகிறோம் என்பதை ஆரம்பத்திலேயே குழந்தைகளுக்குத் தெளிவாக விளக்கி விட வேண்டும். இதனால், குழந்தைகள் களிப்புடனும் கருத்துடனும் கற்கின்ற ஆர்வத்துடன் கலந்துகொள்ளும் சூழ்நிலை அமைகிறது.

(ஆ) செய்யப்போகிற செயலினை பகுதி பகுதியாகக் கற்பிக்கலாம். அல்லது முழுமையாகவே கற்றுத் தந்து விடலாம். இதனை ஆசிரியரே செய்துகாட்டும் போது,