பக்கம்:உடற்கல்வி என்றால் என்ன.pdf/261

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
259
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

உரிமையும் பெருமையும் கிடைக்கிறது என்ற நினைப்பும், திறமைகளை வெளிப்படுத்தி மகிழ்கிற உழைப்பும், சமுதாய அந்தஸ்தும் கிடைக்கிற விளையாட்டுத் துறையினால், சமூக அமைப்பு மேலும் வலிமை அடைகிறது. பொலிவுபெறுகிறது.

ஒற்றுமையே உயர்வு

கூட்டுறவும், ஒற்றுமை உணர்வும் சமுதாயச் செழுமைக்கு விழிகள் போன்றவை. மனிதாபிமானமும், மனித வளர்ச்சியும் ஒற்றுமையால் தான் ஓங்கி வளர்கின்றன.

குடும்ப அங்கத்தினர்களின் ஒற்றுமையால், வீடு வளம் பெறுகிறது. வீடுகளின் வளர்ச்சியால், ஊர் வளர்கிறது. ஊரும் பேரும் வளர்கிறபோது, சமுதாயம் செழிப்படைகிறது. சமுதாயச் செழிப்பே, நாட்டுப்புகழை நாட்டும் நற்கரங்களாக உழைக்கின்றன, உயர்கின்றன. அந்த நாட்டமே ஒரு நாட்டின் நிலையான நீரோட்டமாக அமைகிறது.

ஒற்றுமை என்பது பலர் கூடி பண்போடு நடந்து கொள்வதாகும். தீய காரியங்களுக்குத் துணைபோகும் சண்டாளக் காரியங்கள் ஒற்றுமை என்பதைக் குறிக்காது. சிறந்த நலம் பயக்கும் முடிவுகளை ஏற்படுத்தித் தருகிற ஒற்றுமை (Co-operation) தான் சமுதாய செழுமைக்கு உதவுகிறது.

ஒற்றுமை ஏற்படுவது எப்படி? அவற்றிற்கு சில பண்பாட்டுக் குணங்கள் வேண்டும்.இரக்கம், நட்பு, பாசம், தனிமனித உணர்வு, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை, முயற்சிக்கும் முனைப்பு உள்ளம், மற்றவர்கள் மேல் நம்பிக்கை வைத்தல்; தன் மேலும் நம்பிக்கையுடன்