பக்கம்:உடலழகுப் பயிற்சி முறைகள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

9. அழுத்து அல்லது சாய் (Press)

எந்த பாகத்தைத் தள்ளு என்று பயிற்சியின் போது வருகிறதோ, அப்பொழுது, மற்ற உறுப்புக்களை விறைப்பாக, அசைக்காமல் வைத்தவாறு, சொல்லுகின்ற உறுப்பினை மட்டும் முன்புறமோ, பின்புறமோ, தேவை யான அளவுக்கு அறிவிக்கின்ற வகையில் தள்ள வேண்டும். அல்லது சாய்க்க வேண் டும்.

10. குதித்து நில் (Jump)

துள்ளிக் குதித்து என்றவுடன், தம்' கட்டிக் கொண்டு, உயரே துள்ளி விழு வதோ அல்லது தாண்ட வேண்டும் என்ற கடமையுடன் ஒரங்குல உயரம் கால்கள் தரையைவிட்டு எழும்புவது போலத் துள்ளுவதோ பயிற்சிக்கு அது ஏற்றதில்லை. அது அழகாகவும் அமையாது.

தரையைவிட்டு ஏறக்குறைய ஒரடி உயரம் (ஆளுயரத்திற்கு ஏற்றவகையில்) தாண்டிக் குதிக்க லாம். குதித்து அதே இடத்தில் நிற்பதா, தள்ளி நிற்பதா என்பது, பயிற்சிக்கேற்ற விதத்தில் அமைந் திருக்கும். அதனை அறிந்து செய்ய வேண்டும்.

11. வளைத்து அல்லது சாய்த்து நில் (Lunge)

இருக்கும் இயல்பான நிலையிலிருந்து, முன் சாய்ந்து நிற்பது அல்லது பின்புறமாக சாய்ந்து நிற் பது என்பதானது,பைசா கோபுரம் போன்ற அமைப் பில் உடல் இயங்கி நிற்பதாக இருக்கவேண்டும்.

- |