பக்கம்:உடலுக்கு அழகு தரும் எடைப் பயிற்சிகள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் நவராஜ் செல்லையா 15 ஜோர் என்றால் வலிமை என்று பொருள். அதுபோலவே ஒரு மனிதன் அழகாகத் தோற்றமளிக்கிறான் என்றால், அவன் முகத்திலே பொலிவு இருக்கும். அகத்திலே தெளிவு இருக்கும். உடலிலே இளமை இருக்கும். உறுப்புகளிலே வலிமை இருக்கும். உடல் முழுவதும் செழுமை இருக்கும். முழுமை இருக்கும். வளம் கொழிக்கும். இவை எல்லாம் எப்படி ஒரு உடலுக்குக் கிடைக்கும் என்றால், ஒழுங்கின் வழியாகத்தான் என்ற உண்மையைத்தான் இளைஞர்கள் கட்டாயமாகப் புரிந்து கொள்ள வேண்டும். நோயில்லாத உடலில்தான் நூறுவகை அழகிருக்கும் என்று ஒரு கவிஞர் அழகாகப் பாடியிருக்கிறார். நோய் என்றால் துன்பம் என்று பொருள். வலி என்று அர்த்தம். வேதனை, விசாரம் இப்படியெல்லாம் கூறலாம். நோய் அகன்ற உடலுக்குத்தான் சுகம் கிடைக்கும். சுகம் தேடாத மனிதர்கள், சுகத்தை விரும்பாத மனிதர்கள் இந்த உலகில் யார் இருக்கின்றார்கள்? நோய் என்பதற்கு ஆங்கிலத்தில் Disease என்பர். அதைப் பிரித்துப் பார்க்கிறபோது Dis + Ease என்று வருகிறது. Disease greinpreb Un comfort greng -off;$$ub. Comfort என்பதுதான் சுகம் என்பதாகும். சுகம் என்பது மனதாலும் உடலாலும் பெறக்கூடிய ஒரு மனோரம்யமான சூழ்நிலை. ساسالالالالالاتیت