பக்கம்:உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

25

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


திருக்கிறது. இவ்வாறு காற்றும் உணவும் சேர்ந்த கலவையில் பெறுகின்ற சக்தி, இரண்டு வித காரியங்களை ஒரே சமயத்தில் செய்கின்றன.

சக்தி உருவாக்கப்பட்டு வெளிப் படுத்தப்பட்டவுடன், புதிய தன்மைகள் உடலுக்குள் உற்பத்தியாகின்றன. அதே சமயத்தில் எஞ்சிய சக்தியும் சேமிக்கப்படுகிறது.

உடலின் அடிப்படை இயக்கங்களான சுவாசித்தல், இரத்த ஒட்டம், நாடித்துடிப்பு மற்றும் உடலுள் சுரக்கும் சுரப்பிகள் (Secretions) இவற்றிற்காகப் பயன்படும் சக்தி, இதை உடலின் அடிப்படை இயக்க சக்தி விகிதம் என்று அழைப்பார்கள்.

இப்படி செலவாகின்ற மனித சக்தி - விழித்திருந்து செயல்படும் போது அதிகமாகிறது. தூங்கியோ அல்லது ஒய்வெடுக்கும் பொழுதோ குறைவாக செலவாகிறது.

அதாவது ஒருவர் ஆணா பெண்ணா என்பதில் தொடங்கி, அவரது உடல் எடை, உடல் அமைப்பு, தைராய்டு அளவு மற்றும் ஹார்மோன்கள் உற்பத்தி ஆகியவற்றினைக் கொண்டு, செலவுபடும் சக்தியின் அளவு வேறுபடுகிறது.

இந்த உடல் இயக்க சக்தியானது இளமைக் காலங்களில் அதிகமாக செலவாகிறது. வயது ஆக ஆக, குழந்தைப் பருவம் இளமைப்பருவம் மாறி முதுமை வர வர, செலவாகும் சக்தி குறைகிறது.

அதனால் தான், வயதாகின்ற பொழுது, அதிக எடை தாேன்றுகிறது