பக்கம்:உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

29

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


மாவு சக்திக் குறைவாக இருந்தால், கொழுப்பு, புரோட்டீன் இவற்றிலிருந்து குளூகோஸ் தயாரிக்கப்பட்டு சக்தி அளிக்க உடல் ஏற்பாடு செய்து கொள்கிறது.

உணவில் அதிகமாக மாவு சக்தி சேர்ந்துவிடுடுமானால் தேவைக்கு செலவானது போக, மீதியை கொழுப்பாக (Fat) மாற்றி உடல் சேகரித்து வைத்துக் கொள்கிறது. இவ்வாறு அதிகம் சேரச் சேரத்தான், உடல் கொழுத்துக் காணப்பட்டு காட்சி அளிக்கிறது. அதிக 'தடித்தனத்தை' வெளிப்படுத்திக் காட்டுகிறது.

2. கொழுப்பு (Fat)

அதிக சக்தியை அளிக்கும் ஆற்றல் கொழுப்புச் சக்திக்கு உண்டு. மாமிச வகைகள், பால், பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வகைகள் எல்லாவற்றிலும் அதிகமாகவே கொழுப்பு கிடைக்கிறது.

மாவு சக்தியானது 1 பவுண்டு எடைக்கு 1860 காலரி தான் கிடைக்கிறது என்றால், கொழுப்பானது 1 பவுண்டுக்கு 4220 காலரி கிடைக்கிறது.

இந்தக் கொழுப்பானது, உடலுக்கு சக்தி அளிக்கின்ற நீண்டகால சேமிப்பாக விளங்குகிறது. இந்தச் சக்தி செல்களின் அடிப்படை இயக்த்திற்கும், நரம்புகளின் நுண் இயக்க ஆற்றலுக்கு தூண்டுகோலாக இருந்து உதவுகிறது.