பக்கம்:உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்

40


அத்துடன் எலும்புகளும், பற்களும் வலிமையுடன் இருக்கும் வளமான வளர்ச்சியையும் வழங்குகிறது.

பாலில் தான் கால்சியச் சத்து நிறைய இருக்கிறது. பச்சைக் காய்கறிகளிலும், கீரை வகைகளிலும் மிகுதியாகக் கிடைக்கிறது.

கால்சியச் சத்து குறைந்தால் ரிக்கட்ஸ் என்ற நோய் வரும். வலிமையற்ற எலும்புகள், அளவில்லாத அழகற்ற பற்கள் முளைக்கின்றன. உடலில் வளர்ச்சி குறைகிறது. தசைப்பிடிப்பு ஏற்படும். நரம்புத் தளர்ச்சி போன்ற நரம்பு நோய்களும் நேர்கின்றன.

3. இரும்புச் சத்து (Iron)

நமது உடலுக்குத் தேவையான சத்துக்களில் இரும்புச் சத்தும் ஒன்று. இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அது என்பதை உண்டாக்குகிறது. இந்தப் பொருள் தான் இரத்தத்திற்கு சிவப்பு நிறத்தை உண்டு பண்ணுவதுடன், திசுக்களுக்கு ஆக்சிஜனை எடுத்துச் செல்லவும் உதவுகிறது. செல்களின் சுவாசத்திற்கும் இது உதவுகிறது.

இரும்புச் சத்து உடலில் குறையும் போது இரத்தச் சோகை நோய் உண்டாகிறது. இரத்தத்திற்கு ஆக்சிஜன் எடுத்துச் செல்லும் பணியில் தொய்வும் உண்டாகிறது.

இரும்புச் சத்து பச்சைக் காய்கறிகளிலும் கீரைகளிலும் அதிலும் பசலைக் கீரையிலும், முட்டைகோஸ் பீன்ஸ், போன்றவற்றிலும் அதிகமாகக் கிடைக்கிறது.