பக்கம்:உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



6.

மிகுதியான எடையும் வேண்டாத ஊளைச்சதையும்


மிகுதியான எடை என்பது உடலுக்குரிய தேவையான எடையை விட, மிகுதியான எடை கொண்டிருப்பதாகும். அதாவது அவர் தன் உடல் எடையில் தான் அதிகம் இருக்கிறார். கொழுப்புச் சேமிப்பில் அல்ல என்பதே அதன் அர்த்தமாகும்.

ஊளைச்சதை (Obesity) என்பது தோலுக்கு அடிப்புறத்திலே, மிக மிக அதிகமான கொழுப்புச் சத்தை,தேவைக்கு அதிகமாக சேகரித்துக் காத்து வைத்திருக்கின்ற தன்மையாகும்.

அதாவது, ஒருவருக்குரிய வயது, பால், உடல் அமைப்பு மூலம் இருக்க வேண்டிய பொதுவான எடைக்கும் மேலாக, கட்டுப்பாடற்ற தன்மையில் இருக்கின்ற எடை தான் வேண்டாத சதைகள். அவற்றை தான் ஊளைச்சதைகள் என்று உரைக்கின்றனர்.

ஊளைச்சதைகள் உண்டாவதற்குரிய காரணம் உழைப்பின்மை தான். உதாரணத்திற்கு ஒன்று. ஒருவர் வேலைக்குப் போக அல்லது பள்ளிக்குப் போக, நடந்து போகாமல் காரிலே போகிறார் என்று வைத்துக் கொள்வோம்