பக்கம்:உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா

58


போனாலும், இன்னும் சிலர் வேலைகளைச் செய்ய முடியாமற் போனாலும், தாங்கள் முன்பு சாப்பிட்டு வந்த உணவு வகைகளையே குறைக்காமல் வேண்டி விரும்பி உண்பார்கள்.

தாங்கள் சாப்பிட்டு வந்த உணவு தான், தம்மை இந்த நிலைக்கு இட்டுச் சென்றிருக்கிறது என்பதை தெரிந்து கொண்டிருந்தாலும், அந்தத் தீனிப் பிரியர்கள் மீண்டும் மீண்டும் இரைப்பையை நிரப்பும் நினைப்பிலே, நிதானம் இழந்து போய் விடுகின்றனர்.

வயது ஆக, ஆக, உணவின் அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டும். வேலைகள் செய்வதைக் குறைத்துக் கொள்ளும் போது, வயிற்றுக்குச் சுமை கொடுக்காமல், பார்த்துக் கொள்ள வேண்டும். தங்களது இளமை கால ‘எடுப்புச் சாப்பாட்டை’ முதுமையிலும் முயற்சித்தால் வயிறு கெட்டுப்போக, வாழ்வுமல்லவா கெட்டுப் போகிறது என்பதை எண்ணிப் பார்ப்பதேயில்லை.

உண்மை நிலை தெரிந்து, உணவு முறையை மாற்றி அமைத்துக் கொள்ள முயலாதவர்களே, ஊளைச்சதைக்கு ஆளாகின்றனர். இது எப்படி? உட்கொள்ளும் உணவின் அளவு அதிகம். அதை மாற்றிச் செயல்படும் வெப்பநிலை குறைவு. உறுப்புகளுக்கு வேலை இல்லாமை; உரிய உடற்பயிற்சிகள் தராமை எல்லாமே கொழுப்பினைக் கொண்டு வந்து குவிக்கச் செய்கின்றன.

ஊளைச்சதைக்கு ஆளாகிவிட்டோம் என்பதை ஒருவர் தானே கண்டு கொள்ளமுடியம். எப்படி ?