பக்கம்:உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

83

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா



வந்து இடப்புறத் தரையைத் தொடும்படி திரும்பவும். சமநிலைக்காக வலது கையை தூக்கிக் கொள்ளலாம்.

பிறகு, முதல் நிலைக்கு வந்ததும் மூச்சு விடவும்.

இதுபோலவே, இடது காலை வலது கால் மேல் போட்டு, இடது முழங்காலால் வலப்புறத் தரையை தொடவும். 20 முறை செய்க.

18. (1) பக்கவாட்டில் (ஒருக்களித்துக் கொண்டு) கால்களை நீட்டிப்படுத்து, வலது கையில் தலையை வைத்துப் படுக்கவும். இடது கையை வயிற்றுப் பக்கமாக (ஆதாரத்திற்காக) வைக்கவும்.

2. நன்றாக மூச்சிழுத்துக் கொண்டு, இடது காலை எவ்வளவு உயரம் தூக்க முடியுமோ, அந்த அளவுக்கு உயர்த்தவும் வலது கால் தரையை விட்டு எழாமல் பார்த்துக் கொள்ளவும்.

பிறகு முதல் நிலைக்கு வந்ததும் மூச்சு விடவும். 20 முறை செய்க.

அதே போல் இடப்புறமாக சாய்ந்து படுத்து, இடது கையில் தலையைத் தாங்கியவாறு, இந்தப் பயிற்சியை செய்யவும். 20 முறை செய்க.

19. (1) 18வது பயிற்சிக்கு போல், முதலில் படுக்கவும். இடது கையில் தலையைத் தாங்கி, இடது கை முன்புறம் இருப்பது போல் நிலை.