பக்கம்:உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உடல் எடையும் உணவுக் கட்டுப்பாடும்

88




இவ்வாறு தினமும் தொடர்ந்து மெது ஒட்டத்தில் பங்கு பெறுகிற பொழுது, இரத்த ஒட்டம் விரைவு பெறுகிறது. இரத்தத்தில் உள்ள ‘கொலஸ்ட்ரால்’ எனும் கொழுப்புச் சத்து கரைகிறது. உள்ளுறுப்புக்கள் ஒருங்கிணைந்து உற்சாகமாகப் பணியாற்றுகின்றன.

சிகரெட் மற்றும் பீடி புகைப்பவர்களின் உடலில் உள்ள செல்களில் மாற்றம் விளைவித்து, செழிப்படையச் செய்து, செம்மையான புத்துணர்ச்சியையும் இந்த ஒட்டம் ஏற்படுத்தி விடுகிறது.

இந்த எழுச்சியை நாம் கீழ்க்கண்டவாறு ஒப்பிட்டுக் கூறினால், உங்களுக்கு நன்றாகவே புரியும் என்று நினைக்கிறேன்.

இனிய பரிசு

மெது ஒட்டக்காரர்கள் அனைவரும் உடல் திறப்பாட்டில் நல்ல வல்லமை மிக்கவர்களாகவே நடமாடுகிறார்கள். எப்படி? 50 வயதுள்ளவர்கள் அவர்கள், 20 வயது இளைஞர்களைப் போலவே இளைப்பும் களைப்புமின்றி செயல்படுகிறார்கள். 60 வயதுக்காரர்களோ 30 வயதுள்ளவர்களைப் போல முனைப்புடன் செயல்படுகிறார்கள். இதுதான் இவ்வோட்டத்தின் இணையற்றப் பரிசாகும்.

மருத்துவரிடம் கொஞ்சம் :

இந்தக் கருத்தைப் படித்தவுடன், எல்லோருக்கும் ஒடவேண்டும் என்ற எழுச்சி ஏற்படுவது இயல்புதான். அப்படி