பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒன்றும் இருபத்தொன்றும் ஒண்ணுலேயிருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம் - இருபத் தொண்ணுலேயிருந்து முப்பது வரைக்கும் திண்டாட்டம் - தேதி (ஒண்ணிலே) பண்ணிய வேலைக்குப் பலன்பெறுவது ஒண்ணிலே - மனுசன் படாதபாடு படுவது இருபத்தொண்ணிலே! முன்னே பட்ட கடனைத் தீர்ப்பான் ஒண்ணிலே - பின்னும் மூன்றாம் பேஸ்து விழுந்தது போலவே முகம் சோர்ந்திடும் இருபத்தொண்ணிலே! தென்பழனி திருப்பதிக்கும் பூரீரங்கம் போவதற்கும் சில்லறையைப் போட்டு வைப்பார் தேதி ஒண்ணிலே! அன்புடனே போட்டு வைத்த உண்டியல் வாயைக் கொஞ்சம் அகலமாக்கி ஆட்டிப் பார்ப்பார் இருபத்தொண்ணிலே! சினிமா ட்ராமாக் காட்சிகளுக்கு டிக்கட் கிடைக்கா தொண்ணிலே! தியேட்டர் காலி ஆளிருக்காது தேதி இருபத் தொண்ணிலே! சிகரெட், பீடி, வெத்திலை, பாக்கு விற்பனை அதிகம் ஒண்ணிலே! தெருவில் எறிந்த துண்டுப் பீடிக்கும் கிராக்கி வந்திடும் இருபத்தொண்ணிலே! கொண்டவனும் கொண்டவளும் குழந்தை குட்டியோடு கும்மாளங் கொட்டுவது ஒண்ணிலே - அவர் கூச்சல் கிளப்பிக் கிட்டு குஸ்திகளும் போட்டுக் கிட்டு கோணிக் கொள்வார் இருபத் தொண்ணிலே! தம்பிகளின் வாடகைச் சைக்கிளோட்டம் ஒண்ணிலே! தரையில் நடந்து வருவார் இருபத் தொண்ணிலே! நண்பர் நடமாட்ட மெல்லாம் ஒண்ணிலே - எந்த நாயும் எட்டிப் பார்க்காது இருபத் தொண்ணிலே! கொண்டாட்டந்தான் தேதி ஒண்ணிலே! திண்டாட்டந்தான் இருபத் தொண்ணிலே! - முதல் தேதி 89