பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆடல் முடிந்ததும் பாடல் முடிந்ததும் ஆழிக் கரைதனிலே! ஊடலையே அங்கு கன்னியர் காளையர் நாடிடும் வேளையிலே தோள்விழிப் பூங்குழல் மாதவி கோவலன் தோன்றினன் கானலிலே - இன்பச் சூழ்நிலை கண்டு தனித்தனர் ஆங்கொரு துய்மணல் மேடையிலே! சிலம்போ சிலம்பு! தேவியாம் கற்பிற்கரசி செல்வி எங்கள் கண்ணகியாள் தெள்ளு தமிழ்ப் பெண்மணியாள் சீரோங்கும் செல்வத் திருநாள் கொண்டாடுவோம். சேவகர்கள் சேனைசூழச் சிற்பச்சிலை நாட்டினார் தேச மக்கள் நேசங் கொண்டே சேவை செய்தே போற்றினார். பாவலராம் இளங்கோ, பண்டிதர் சாத்தனார் பக்கம் நிற்கச் சேரர் கோமான் பனி மலர் மாலை சாத்தினார். கண்ணகியாள் வண்ணமணிச் சிலம்போ சிலம் கற்பரசி காலிலிட்ட சிலம்போ சிலம்பு! பெண்குலத்தைப் பெருமைசெய்யும் சிலம்பே அலடிடி பல பேதமிலா காதல்வளர் சிலம்போ சிலம்பு! முத்தமிழை முழங்கவைக்கும் சிலம்போ சிலம்பு! - மணி முடிமன்னர்கள் மூவர்புகழ் சிலம்போ சிலம்பு 125