பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. பட்டின் உடைகள் பசும்பொன் அணியொடு பல்லாக்கு மேனா மேல் வருவார் அஷ்டாச்சரம் பஞ்சாட்சரம் முணங்கலும் ஆலயம் தொழுவதும் ஆஸ்திகமா? கட்டத்துணியும் கஞ்சியுமின்றிக் கண்ணிர் பொழியும் எளியாரைக் காக்கும் கடமைக் கடவுளர் அருளினும் ஏற்றவை யென்பது நாஸ்திகமா? - இதில் (ஆஸ்தீகம்) - சொர்க்கவாசல் ஓ... ரசிக்கும் சீமானே! ஓ... ரசிக்கும் சீமானே வா! ஜொலிக்கும் உடையணிந்து களிக்கும் நடனம் புரிவோம் - அதை நினைக்கும் பொழுது மனம் இனிக்கும் விதத்தில் சுகம் அளிக்கும் கலைகள் அறிவோம். (ஒ... ரசிக்கும்) கற்சிலையும் சித்திரமும் கண்டு - அதன் கட்டழகிலே மயக்கம் கொண்டு, - கற்சிலையின் கட்டழகிலே மயக்கம் கொண்டு, - வீண் கற்பனையெல்லாம் மனதில் அற்புதமென்றே மகிழ்ந்து விற்பனை செய்யாதீர் மதியை - தினம் நினைக்கும் பொழுது மனம் இனிக்கும் விதத்தில் சுகம் அளிக்கும் கலைகள் அறிவோம். (ஒ. ரசிக்கும்) வானுலக மோட்சமதை நாடி - இன்ப வாழ்க்கை யிழந்தவர்கள் கோடி - பெண்களின்ப வாழ்க்கை இழந்தவர்கள் கோடி - வெறும் ஆணவத்தினாலே பெரும் ஞானியைப்போலே நினைந்து வீணிலே அலையவேண்டாம் - தினம் நினைக்கும் பொழுது - மனம் இனிக்கும் விதத்தில் சுகம் அளிக்கும் கலைகள் அறிவோம். (ஒ. ரசிக்கும்) - பராசக்தி 155