பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உறவும் இல்லை. பகையும் இல்லை! உறவுமில்லை பகையுமில்லை ஒன்றுமேயில்லை! உள்ளதெல்லாம் நீயேயல்லால் வேறெ கதியில்லை! - இனி யாரும் துணை யில்லை! (உறவு) எனது வாழ்வின் புனித ஜோதி எங்கே சென்றாயோ? இதயம் குளிரச் சேவை செய்யும் நினைவும் வீணானதே! கனவும் பாழானதே! (உறவு) முடிவிலாத துன்பமதிலும் இன்பம் வேறேது? கெடுதி செய்வார் தனிலும் மேலாம் நண்பர்தானேது? அடையமுடியாப் பொருளின்மீது ஆசை தீராது அபிமானம் மாறாது!! (உறவு) குளம் நிறைந்தால் ஜலம் வழிந்தே வேறு வழி யேகும்! குமுறிப் புகையும் எரிமலையும் ஓர் நாள் அமைதி யாகும்! மனதில்பொங்கும் துயர வெள்ளம் வடியும் நாளேது? - ஒரு முடிவு தானேது?... (உறவு) - தேவதாஸ் தாயும் சேயும் பிரிந்ததைப் பார்: தாயும் சேயும் பிரிந்ததைப் பார் சதியதனாலே சன்மார்க்கமில்லாக் கொடியவரின் தன்னலத்தாலே! (தாயும்) ஆசைப்பேயின் அடிமைகளாய் ஆனதினாலே அநியாயமெல்லாம் மனஈரமில்லார் செய்வதைப்பார் தன்மனம்போலே தீயளண்ணம் நிறைந்த நாட்டில் பிறந்ததினாலே துயஉள்ளம் துடிப்பதைப் பார் துயரத்தினாலே! பாயும் வேங்கைப் புலியின் முன்னே மானதுபோலே பழிபாவ மஞ்சாக் கயவர்களின் செய்கையினாலே (தாயும்) 173