பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளைஞர்களுக்கு...! தேசப்படங்கள் சரித்திரங்கள் பார்க்காமல் சினிமாப்படங்களைப் பார்க்கின்றீர்! - அதில் வேஷம் போடும் ஸ்டார்கள் வீட்டுப்புறம் உள்ள ரோட்டைச் சர்வே செய்து அளக்கின்றீர்! காசுதந்து வாங்கி, கண்றாவிப் படங்களைக் கால் சட்டைப் பைக்குள்ளே மறைக்கின்றீர்! - பின்னும் கையில் வைத்துக் கொண்டும் காதல் பாட்டுப் பாடிக் காகிதத்தில் முத்தம் கொடுக்கிறீர்! இப்ப, நல்லபிள்ளைகள் மீது உங்களாலே - அவ நம்பிக்கையாச்சுதடா - சொந்த நாட்டுக்கும் வீட்டுக்கும் உபயோகமில்லாத நாளைப்போக்கற பசங்களா! சைக்கிள் மேல் தங்கப் பொம்மை! சைக்கிள் வண்டி மேலே - பசுந் தங்கநிறப் பொம்மை போலே - நீ தனியாச் செல்லலாமா? - இவரைத் துணையாய்க் கொள்ளலாமா? - லேடிஸ் கட்டழகி உன்னுடைய பேட்டி - ரெண்டு கண்களுக்கு நல்லதொரு பார்ட்டி - நீ காலாலே இடுகிற டுட்டி - என் கையாலே எப்போதும் செய்வேன் சீமாட்டி பெண்ணழகு போட்டின்னு ஒண்னு - தந்திப் பேப்பரிலே பார்த்தேண்டி கண்ணு - அதில் உன்னை விட்டு அடிப்பேன் வின்னு - நம்ம உதவியும் தேவையுண்டு யோசனை பண்ணு! தேகத்தில் காணும் ஜோக்கு - அது டிசம்பர் கிருஸ்மஸ் கேக்கு - நீ வேகமாய்ப் போகும் போக்கு - உன்னை விரட்டி விரட்டியே ஆயிட்டேன் வீக்கு - சித்தி 199