பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யோக்கியன் எங்கே? தொகையறா வாக்காலே பிறர் வாழ்வைக் கெடுத்தே வாழ்வாரும் மனத்தாலே கெடுக்கவழி பார்த்தே இருப்பாரும் யாக்கையின் பலத்தாலே அடித்துப் பிழைப்பாரும் அல்லாமல் நல்லோரை அறியேன் பராபரமே! யோக்கியன் என்பவன் உலகத்திலே ஒருத்தனும் கிடையாது? - பரம (யோ) மண்ணாசை பெண்ணாசை பொன்னாசை - இந்த மூணும் இருக்காது ஆசையினாலே பொறந்து வளர்ந்தது அரிய மானுடப் பிறப்பு அதற்காதார மானதும் அவசியமானதும் காசு பணம் கையிருப்பு - அந்தக் காசு பணத்தைக் கண்யமாகவே கைசேர்த்துவது மறுபிறப்பு - இதைக் கவனிச்சுப்பாரு உருட்டுக்கும் புரட்டுக்கும் திருட்டுக்குள்ளேதான் நடக்குது பொழப்பு (யோ) இல்லாத கொடுமை ஏமாற்றத் தெரியான் இருட்டுலே போடுறான் தேட்டை, இலட்சக் கணக்கில் கைமாத்தி கிய்மாத்தி இன்சால் வெண்டாகுறான் பணமூட்டை, கள்ளனென்ற பேரால் காணாத போது கத்தரித் தெடுக்கிறான் பொன்னே - கழுத்தில் கத்தரித் தெடுக்கிறான் பொன்னே! - நகைக் கடையின்னு வச்சுக்கிட்டுக் கல்லாலே உரைச்சிக்கிட்டு கரைக்கிற செட்டியவங் கண்ணே - இதில் (யோ) தீர்க்கதரிசி பல நூற்றாண்டிலே தெய்வம் போலொண்ணு பொறக்கலாம்: ஏசு புத்தர் காந்தியைப் போலே செத்தும் சாகா திருக்கலாம்! - மாமியார் மெச்சிய மரு. 258