பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எங்கள் சங்கத் தமிழ் நாடு எங்கள் தந்தை தாயின்நாடு சங்கத் தமிழ்த் திருநாடே (எங்கள்) சங்கத்தருந் தரளம் பவளம் தங்கம்விளை நாடு கங்கைக்கிணை ஆமெனுங்கா விரிவளஞ்செய் நாடு (எங்கள்) போர்வேந்தர்கள் போற்றும் புனித ஏர்வேந்தர்கள் நாடு கார்வேந்தன் ஐந்தருவும் போலக் கருணையாளர் நாடு (எங்கள்) ஆடும்புலி மானுமே நீர் ஆடும்துறை நாடு ஈடில்விழுச் செல்வம் கல்வி ஏற்றம் வாய்ந்த நாடு (எங்கள்) வையம்பெறும் மாந்தர் யார்க்கும் வாழும்நெறி சாற்றும் பொய்யாமொழி தந்த தெய்வப் புலவன் வந்த நாடு (எங்கள்) குடகும்.குண கடலுங் குமரி வடவேங் கடமருங்கில் இடமாய்எழில் பலவும் நீடும். இன்பம் வாய்ந்த நாடு (எங்கள்)