பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வந்தனள் ஒரு சுந்தரி! வந்தனள் ஒரு சுந்தரி - திரு மங்கை போலொரு மாது - கொஞ்ச வயதுதான் நல்ல சாது - வீசு வாச மேவும் ஜவ்வாது - அன்று மாலை வீசியுன் மாலையே கொண்ட மாதிவி என்னும் போது: கந்தமார் குழல் வண்டினம் - கொன்றைக் காயுடனிருள் மேகம் - நுதல் கலாமதிக் கொரு பாகம் - புருவம் ககன வில்லுடன் ஸ்நேகம் கானில் வாழ் மடமானையும் - நுதல் மீனை மானுதலாகும்! மாசில்லாள் முகம் தேசுலாவிய வானகச் சுந்தர பிம்பம் - படர் மதன மோகன டம்பம்! - கண்டம் வாரி தோய்ந்த வெண்சங்கம் - திகழ் மார்பிடந்தனில் வார்பெறுந் தனம் சீர்பெறும் செம்பொற் கும்பம் (வந்தனள்) - கண்ணகி காக்கை விடு தூது கொண்டல் வண்ணம் போலே நிறம் கொண்ட காக்கா - நீதான் கொண்டவர்க்குக் கோபமேனோ கூறு காக்கா! காலைத் துயில் எழுந்து கத்தும் காக்கா - எந்தன் காதலர்க்கு என் மீது கோபம் ஏது காக்கா! வரும் விருந்தைக் கரைந்து சொல்லும் காக்கா நீதான்! வள்ளல் திருவாய் திறக்கச் சொல்லு காக்கா! காக்கரட்டன் காயைப் போலே காணும் மூக்கா! - நான் காமன்அம்பால் வாடலாமோ சொல்லு காக்கா! காகா காகா எனவே ராகம் பாடும் காக்கா கட்டழகன் காதை மெல்லக் கொத்து காக்கா உட்கார்ந் திருக்கிறாரே ஊமை போலே சும்மா - அவர்க்கு உண்ண என்ன வேணு மென்று கேளு காக்கா!! - பத்ருஹரி 49