பக்கம்:உடுமலை நாராயண கவி பாடல்கள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண் பெண் : ஆண் பெண் : பெண் ஆண் பெண் : ஆண் : பெண் : ஆண் அன்பே என் ஆருயிரே! அன்பே யென்னாருயிரே! அங்கு நிற்பதேனோ? யாருமில்லா வேளையிலே இந்த வெட்கமேனோ? இன்பமாம் ராஜபோகம் ஏழைக் கேதுஸ்வாமி? இருவர் நாளும் உறவுகொண்டால் ஏற்குமோ இப்பூமி? அரசனென்றாலும் ஆண்டியென்றாலும் மருவிய காதலிலே பேதமுண்டோ? ஆசையினால் பேசும் வாசகமா? நிஜமா? அன்பாலென்றும் ஒன்று சேருமா? சந்தோஷந் தீர்ந்தால்பின் மாறுமா? கற்ற கலை ஞானமென்னும் கடவுள் மீதில் ஆணை கனவிலும் என் நினைவிலும் நான் கைவிடேனே மானே வெற்றியும் நீரே வீரமது நானே உற்றதுணை நாமேதான் உலகினிலே. வேண்டுமென் பாக்கியமெல்லாம் வேல்விழி நீயல்லவோ? வேண்டாத வீண் புகழ்ச்சி வேணுமா? கண்ணே இன்னுங்கூட நாணமா? அன்பே யென்னாருயிரே அறிவொடு நாமே! என்னைவிட்டு எங்கே போனே மானே? இன்பதுன்பம் இருவகையில் இசைந்து வாழுவோம்!! - காவேரி 71