பக்கம்:உணர்ச்சி வெள்ளம், அண்ணாதுரை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23

இன்று, நான் இங்கு நின்று பட்டச் சிறப்புப் பெற்றிட வந்துள்ளோரையும் பெரும் பேராசிரியர்களையும் கண்டு களித்திடுகின்றேன்; இங்கன்றோ அந்நாளில் பாண்டியப் பேரரசர் சங்கப் புலவருடன் அளவளாவி, அறிவுப் புனலாடி அகமகிழ்ந்திருந்தனர் என்பதனை எண்ணுகின்றேன்.- இன்பத் தேன்சுவை நுகர்கின்றேன். கள் மனக் கண்ணால் காணுகின்றேன். முதுபெரும் புலவர் அவைநோக்கி, முந்நூறு கல் தொலைவினின்றும், மூதறிஞர், காணீர் தமிழ் நெறியை - தாரணியோர். மெச்சி ஏற்றிடத் தக்கதோர் நன்னெறியை - ஈரடியில் யான் இயற்றியுள்ள சீரணியை என்றுரைத்த வண்ணம். திருவள்ளுவனார் வந்திடும் காட்சியினை, தத்தமது ஏடுகளை, வித்தகர் போற்றிடத் தக்கவென விளக்கி, புலவர் பெருமக்கள் பேருரையாற்றிய பெருமிதமிகு காட்சியெலாம் காணுகின்றேன்; காணாதார் எவருமிரார். எத்தகைய அறிவாற்றல். என்னென்ன திறனாய்வு, இங்கிருந்தன அற்றைய தாளில்? இந்தக் கவிதை எம்மான் இயற்றியது என்றியம்பிய சொற்கேட்டும், நெற்றிக்கண் காட்டினாலும் குற்றம் குற்றமே' என்றுரைத்த அரிமாப்பெரும் புலவர் நக்கீரர் தெரிகின்றார்; நந்தமிழர் கொண்டிருந்த மாண்பு தெரிகின்றது. . அச்சம் தவிர்த்திடுக!. நவநிதியந் தந்திடினும் நந்திக் கிடந்திட இசையாதீர்! வாய்மைதனைக் காத்திடும் வன்மை தனைப் பெற்றிடுக! அதற்காக நெருப்பாற்றில் நீந்திடவும் துணிந்திடுக! யாந்தமிழர் என்பதனை மெய்ப்பித்திடுக! என்றன்றோ அந்நாள் நிகழ்ச்சி நமக்கெல்லாம் அணையிடக் 'காண்கின்றோம்.