பக்கம்:உணர்ச்சி வெள்ளம், அண்ணாதுரை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29

மாசு படிந்த மணிபோல நம் எண்ணக் குவியல் இருக்கிறது 'எவ்லாம் பிற நாடுகளிலே உள: நம் நாட்டிலே ஏதும் இல்லை என்ற பிச்சை மனப்பான்மை செத்தொழிந்து எமக்கு ஈந்திடும் என்று எந்நாட்டவரும் கேட்டுப் பெற்றிடத்தக்க ஏற்புடைய எண்ணக் குவியல் எம்மிடம் உண்டு; அது மாசு படிந்த மணிபோல மங்கியதோர் ஓவியம்போல உளது; மாசு துடைத்திடுவோம்; மணி ஒளியைக் காட்டிடுவோம் என்ற எழுச்சியுடன் கூறத்தக்க விழிப்புணர்ச்சி மேலோங்கி உள்ள காலம் இது; அதனைச் செவிலித் தாயாகப். பெற்றுள் ளது இம்மதலை - மதுரைப்பல்கலைக் கழகம். எனவே, இதற்கென்று ஒரு தனித்தன்மை. இதற்காக ஓரு தனிப்பாதை இருத்தல் வேண்டும். இந்தப் பல்கலைக் கழகம், தமிழகத்துக்குக் கருவூலந்தன்னை உலகு காணுதற் கான வழிவகுக்கும் கோட்டமாகி, புலிப்பொறித்தான். கயல் பொறித்தான், ஆரியப்படை கடந்தான் - கங்கை கொண் டான், கடாரம் வென்றான் என்றெல்லாம் புல்லரிக்கும் வர லாற்றினைப் படிக்கின்றோமே, அதற்கு ஒப்ப, குறளளித்தார், மேகவை ஒளி தந்தார், அகமும் புறமும் அறிவித்தார் என்று அவனியிலுள்ள நாடுகளில் வித்தகர் மெச்சிடத்தக்க, புது வரலாறு சமைத்திடுதல் வேண்டும்; அதற்கேற்ற அணி வகுப்பைத் திரட்டுதல் இந்தப் பல்கலைக் கழகத்தின் தனித் திறனாய் அமைந்திடுதல் வேண்டும். பாடமுறை, பயிற்சி முறை, தேர்வுமுறை எல்லாமே, இந்தத் தனி நோக்கம் கொண்டிடுதல் மிக நன்று. உரியவர்கள் இது பற்றி ஆய்ந்தறிதல்வேண்டும். விருப் பம் உரைக்கின்றேன், வடிவம் கொடுத்திடும் பொறுப்பில் உள்ளோர் செய்திடுவர் எனும் ஆர்வம் கொண்டு. அச்சம் தவிர்த்தல், ஆய்ந்தறிதல், நாட்டுநிலை உயர்த் தல், பிறநாடுகட்கு நம் தனிச்செல்வம் ஈது எனக் காட்டிடல்,