பக்கம்:உணர்ச்சி வெள்ளம், அண்ணாதுரை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

சீர்திருந்தும் கூவம் பாக்கியம் வெகு காலமாகவே துர்நாற்றம் பிடித்த ஆறு என்று ஏசப்பட்டுவந்துள்ள இந்த ஆறு இன்று மிகுந்த செய்துள்ளது. எந்த ஒரு ஆற்றுக்கும் இப்படி ஒரு சேர ஐந்து மந்திரிகள் சென்றதில்லை. அழுக்காற்றை நல்ல நீரோடும் ஆறாக ஆக்கும் திட்டத் துவக்கத்துக்கு ஐந்து மந்திரிகளும் வந்திருக்கிறார்கள். தமிழகத்தின் பல பகுதியிலிருந்தும் இங்கு புதிதாக வந்து போகக் கூடியவர்கள் அவரவர் ஊர் ஆற்றின் துர்நாற்றம் பற்றியே ஆண்டுகளுக்கு முன் இது தான் அன்றாடப் பேச்சுக்களில் ஒன்றாக இருந்திருக்கும். சென்றதும் இந்த பேசுவார்கள். 10-15 புறப்படுகிற இடத்தில் தூய்மையாகவே புறப்படுகிற இந்த ஆறு அலைந்து வளைத்து அழுக்கைச் சேர்த்துக் கொள்ளு கின்றது. கடலோடு போ' என்று நகர மக்கள் அதை விரட்டு கிறார்கள். கடல் அலைகளோ நீ இங்கே வராதே என்று விரட்டு கின்றன. ஆக இந்த பலமான போராட்டம் பலகாலமாகவே நடை பெற்று வருகின்றது. இதற்கொரு முற்றுப்புள்ளி வைக்கக் கூடிய ஒரு திட்டத்தை பொறியியல் வல்லுநர்கள் தந்திருக்கிறார்கள். அதன்படி இத்திட்டம் நிறைவேறியதும் அது தரக்கூடிய எழில் தோற்றத்தைத்தான் வரைபடமாக்கி இங்கே வைத் திருக்கிறார்கள். கிடைப்பதற்கரிய கற்பனை அல்ல. உண்மை நிலையாக இது உருவாகும். இந்தத் திட்டம் சீரோடும் சிறப் போடும் நடைபெறும்.