பக்கம்:உணர்ச்சி வெள்ளம், அண்ணாதுரை.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51

5-1 தேம்ஸ் நதிக் கரையினிலே மற்ற மாநகரங்களிலெல்லாம் இத்தகைய இயற்கை வசதி அதாவது நகருக்கு மத்தியில் ஆறு ஓடுவதை பெரும் வாய்ப்பாகக் கருதுகிறார்கள். தேம்ஸ் நதிக்கு லண்டன் மாநகர மக்கள் அளித்துள்ள' முக்கியத்துவம் பற்றி அங்கு போய்வந்தவர்கள். சொல்லவும் படித்தும் அறிந்திருக்கிறேன். உல்லாசமாக உலாவரத்தக்க பூங்காற்று வீசுகின்ற பூங்காக்கள் நிரம்பிய கரைகளை அந்த ஆறுகள் பெற்றிருக் கின்றன. அப்படிப்பட்ட இயற்கை அழகைக் கொண்ட இந்த நதி சென்னை நகரினுள் ஊடுருவிப் பாய்கிறது. மக்கட். தொகை நிரம்பிய பகுதிகளின் வழியே இந்நதி ஊடுருவி வருவதை இந்த வரை படத்தை உற்று நோக்கினால் தெரியும். சிலகாலம் வெள்ளக்காடாகவும், சிலகாலம் சேறும் சகதியும் மிகுந்ததாகவும் ஒழுங்கின்றி இருக்கும். சிலகாலமாகவே இதை சீரமைப்பது பற்றிப் பேசப் யட்டு நிபுணர்களால் திட்டங்கள் தீட்டப்பட்டு வந்துள்ளன. கூவம் சீரமைப்பு பற்றி விவாதிக்கக் கூடிய மொன்றில் நானும் பங்கேற்றதாக எனக்கு நினைவு. கூட்ட வேறு காரியங்களில் அரசு ஈடுபட வேண்டியிருந்ததால் இதனைக் கவனிக்க இயலாமற்போனது. மேலும் இதை புறாக் கூட்டிலேயே போட வேண்டாம் என்றே நாங்கள் வந்ததும் இதை நிறைவேற்றத் தீர்மானித்தோம்.