பக்கம்:உணர்ச்சி வெள்ளம், அண்ணாதுரை.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

ஏழைகளின் இதயத்தலைவர் ஜீவா அருமைத் தலைவர் ஜீவாவின் புதல்வி உஷா தேவியின் இந்த மணவிழாச் செய்தி பத்திரிகைகளிலே வெளிவரும் -போது அந்தச் செய்தியைப் படிக்கின்ற அனைவரும் மண மணவிழா தமிழகம் மக்களை வாழ்த்துவார்கள்.. இந்த முழுமைக்கும் மகிழ்ச்சி அளிக்கும் மணவிழாவாகும். காரணம், தமிழகத்திலுள்ள எல்லா மக்களின் நன்மதிப்பைப் பெற்று, குறிப்பாக ஏழை எளிய மக்களின் இதயங்களில் இடம் பெற்றவர் ஜீவாவாகும். அத்தகைய ஒப்பற்ற தலைவரின் புதல்வியின் திருமணத்தைத் தமிழகத்திலுள்ள ஒவ்வொரு குடும்பத்தினரும் தங்கள் இல்லத்தில் நடைபெற்ற மண விழாவாகக் கருதி மகிழ்வார்கள். பல்லாயிரக்கணக்கான மக்கள் பெறாத பேற்றை இந்த மணமக்கள் பெற்றிருக்கிறார்கள். காரணம்: இந்த விழாவை பெரியார். அவர்களே முன்னின்று நடத்துகிறார்கள். நான்கூடப் பெரியாரிடம் வரும்போது மணமான பின்னர் வந்தேன். எனக்குக்கூட அந்தப்பாக்கியம் கிடைக்க வில்லை. ஒரு பெரிய குடும்பத் தலைவர் தனது இல்லத்தில் நடை பெறும் விழா நிகழ்ச்சியின்போது அமர்ந்து ஆனந்தப்பட்டுக் கொண்டிருப்பார்."அதோ அவன் என் மூத்தமகன் டாக்டர்! இவன் இரண்டாவது பையன் வக்கீல். அவன் மூன்றாவது பையன் என்ஜினியா என்று அவர்கள் ஓடியாடி வேலை செய்யும்போது பக்கத்திலிருப்பவர்களிடம் கூறிப் பூரிப்பார்