பக்கம்:உணர்வின் எல்லை.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மருத நிலத் தலைவன்

125

யுள்ளகணக்கற்ற பாடல்களை எட்டுத்தொகை நூல்களுள்-அன்பின் ஐந்திணையை அழகுறப் பேசும் சொற்றிறம்மிக்க இலக்கியங்களாகிய நற்றிணை, நல்ல குறுந்தொகை, தீங்கரும்பனைய ஐங்குறுநூறு, கற்றறிந்தோர் ஏத்தும் கலி, அருமைசான்ற அகநானூறு எனப்படும் ஐந்து பேரகப்பொருள் நூல்களுள் பரக்கக் காணலாம்.

மருதநில வாழ்க்கைக்கு உயிர் நாடியாய் விளங்குபவன் செல்வவளம் சிறந்த அந்நிலத் தலைவனே. அவனை, 'மகிழ்நன்' என்றும், 'ஊரன்' என்றும் கூறுவர் பழந்தமிழ்ப் புலவரும், மக்களும். அவன் திறத்தையும், அவன் மதிப்புக்கு உரிய மனையாளின் கற்பின் பொற்பினையும் கவினுற விளக்கும் சீர்மை சான்றன, சங்க இலக்கியங்களில் அடைந்து கிடக்கும் மருதத்திணைப் பாடல்கள். மருதத்திணை அல்லது மருத நிலத்துக்கு உரிய சிறந்த ஒழுக்கம் 'ஊடல்' பதைக்கண்டோம். இந்த ஊடலின் நுட்பம் விரித்தால் பெருகும். காதல் வாழ்வு வாழும் உயிர்களுக்குக் கண்ணாய் அமைந்து பேரின்பம் வழங்கும் உயரிய பண்பே 'ஊடல்'. மக்கள் ஐம்புல அறிவோடு மன அறிவும் உடையவர். உண்ணும் உணவு முதலியவை ஐம்புல னறிவுக்கு விருந்தாகும். ஆனால், மன அறிவுக்கோ,கனிவுடைமொழியும் நெஞ்ச நெகிழ்ச்சியுமே வேண்டுவன.

ஊடல் துறையின் நுட்பமறிந்தோர், அன்புவழி அடைவதற்கே இல்லறவாழ்வில் ஊடல் நிகழ்கிறது என்ற உண்மையை உணர்ந்து போற்றுவர், ஊடல்