பக்கம்:உணர்வின் எல்லை.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

உணர்வின் எல்லை

யாரெனக் கவனித்தேன். ஆம்; என் நண்பன்தான்! ‘என்னப்பா!’ என்றேன். வழக்கம்போல ‘ஒன்றுமில்லை’ என்று சொல்லிக்கொண்டே, எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்தான்.

‘என்னப்பா எழுதிக் கொண்டிருந்தாய்?’ என்றான், என் எதிரே இருக்கும் தாள்களைப் பார்த்து.

கட்டுரை—‘தமிழன் குரலுக்கு’ என்றேன்.

“ஓ! ‘தமிழன் குரல்’! எவ்வளவு இனிய பெயர்! ஆனால்?.....” என்று சோர்வோடு இழுத்தான்.

“என்னப்பா, என்ன?' என்றேன்.

‘தமிழன் குரல்’ என்றாயே! அதைக் கேட்டதும் ஏதேதோ நினைவுகள்—நம் தமிழ்ச் சாதியைப்பற்றிய நினைவுகள்—ஈட்டி போலப் பாய்ந்து வந்தன,'’ என்றான்.

‘என்ன, அப்படி ?’ என்றேன்.

‘தமிழன்! தமிழன்!’ என்று கூவுகிறார்கள் ; கட்சிகள் பேசுகிறார்கள். ஆனால், தமிழும் தமிழனும் ஏன் இன்னும் முன்னேறி உலகில் முதலிடம் பெற முடியவில்லை? அவன் மொழி உலக அரங்கில் கேட்கிறதா? சரி; இந்தியாவிலேயே வேங்கடத்திற்கு வடக்கே அவன் மொழி முழங்குகிறதா? இல்லையே! அது தான் போகட்டும், அவன் நாட்டை அவன்