பக்கம்:உணர்வின் எல்லை.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பொருத்தமான உவமை

66


வன் பால் அவள் கொண்ட அன்பு மேலும் மேலும் வளர்ந்து உரம் பெறவும், அறிவும் அன்பும் ஒருங்கே படைத்த ஒரு தோழி எவ்வளவோ துணையாய் இருந்தாள். அவளுடைய துணை மட்டும் இல்லாதிருந்தால், அந்த இரு காதலர்களும் இவ்வளவு தூரம் கலந்து பழகி இன்பம் கண்டிருக்க முடியாது. ஆம்; உண்மையில் அந்தத் தோழி அவ்விருவர்க்கும் உற்றூழி உதவும் உயர்ந்த கட்புடையளாய், காலப் பெரு வெளியில் கல்லும் முள்ளும் இல்லாத-பூவும் மகரந்தப் பொடியுமே சிந்திக் கிடக்கும் நன்னெறியினைக் காட்ட வல்ல வழி காட்டியாய், சமயம் நேர்ந்த போதெல்லாம் அறிவமிழ்தம் புகட்ட வல்ல ஆசிரியையாய்த் திகழ்ந்தாள். கண்ணைக் காக்கும் இமைபோல அவர்களை - அவர்கள் காதலை அவளே காத்து வந்தாள். அந்தக் காதலர் இருவரும் அவள்பால் கொண்டிருந்த அன்பிற்கும், மதிப்பிற்கும் ஒர் எல்லேயே இல்லை. நன்றி உணர்ச்சி நிறைந்த அவர்கள் இதயம் எப்போதும் அவள் உதவியை-உள்ளன்பை-எண்ணி எண்ணிப் போற்றிய வண்ணம் இருந்தது.

இவ்வாறு அருள் நெஞ்சம் படைத்த தோழியின் துணையால் கற்பனைச் சிறகுகள் கட்டிக் கொண்டு இன்ப வானில் பறந்துகொண்டிருந்த அக் காதலர் வாழ்வில், சிறு கலக்கத்திற்குரிய நிலை ஏற்பட்டது. -

தலைவி காதலே வடிவமானவள், தலைவனும் அப்படித்தான்; ஆனால், அவன் தலைவியைப்போல

5