பக்கம்:உணர்வின் எல்லை.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



8. புலமையும் கருணையும்

புகழுடல் பெற்ற நலங்கிள்ளிக்குப்பின், பொன்னி பாயும் புனல் நாட்டின் ஆட்சி உரிமை, கிள்ளி வளவன் என்பானுக்கு உரியதாயிற்று. கிள்ளிவளவன் சிறந்த வீரன்; கலை உள்ளமும் கவிதை நெஞ்சமும் படைத்தவன்; பாணர் குடியைப் பாதுகாக்கும் கருணை இதயம் கொண்டவன். இத்தகைய சிறந்தோனாய் விளங்கிய இவனையும், இவன் காலத்தின் சூழ்நிலை விடவில்லை. அதன் விளைவாகக் கற்பனைக்கும் எட்டாத கொடியதொரு செயலைப்புரிய முற்பட்டான். ஆத்திரம் அறிவுடையார் கண்களையே ஒரோவழி ஒளியற்றதாக்கிவிடும்பொழுது, அரசன் கண்கள் எம்மாத்திரம்? .

நலங்கிள்ளியின் காலத்தில் கோவலூரைத் தலைநகராகக் கொண்டு மலையமான் திருமுடிக்காரி என்பான் ஆட்சி புரிந்து வந்தான். கபிலர், மாறோக்கத்து நப்பசலையார் போன்ற சான்றோர்கள் பாடும் புகழ் பெற்றாேனாய் அவன் விளங்கினான். மூவேந்தரும் போற்றும் மொய்ம்புடையோனாகவும் அவன் திகழ்ந்தான். வீரத்திலும் புகழிலும் மேம்பட்டு விளங்கிய அவ்வேந்தன், தன்பால் திரண்டுவந்து குவிந்த செல்வங்களையெல்லாம் முத்தமிழ் வளர்க்கும் பாணர்க்கும் புலவர்க்கும் கூத்தர்க்கும் விறலியர்க்கும் வரையாது ஈந்து, வான் புகழ்பெற்று விளங்