பக்கம்:உணர்வின் எல்லை.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலமையும் கருணையும்

77


கினான் அதனாலேயே அவனேத் தேர்வண் மலையன்’ என்று சிறப்புப் பெயரிட்டுச் செந்தமிழ்நாடு முழுதும் மக்கள் போற்றினர்கள். இத்தகு புகழ் படைத்திருந்த மலையமானுக்கும், கிள்ளிவளவனுக்கும் எக் காரணத்தாலோ கடும்பகை மூண்டிருந்தது. மலையமான் அழிவைத் தன் வாழ்வாகக் கருதும் அளவிற்கு அவன் பகைமனம் வளர்ந்திருந்தது. மலையனும் இறந்து போனான். இச்செய்தி அறிந்தான் கிள்ளிவளவன்; 'இனி இவன் பகை ஒழிந்தது! என ஆறுதல் கொண்டான். ஆனால், மலையமான் திருமுடிக்காரிக்கு மழலை மிழற்றும் இரு குழந்தைச் செல்வங்கள் இருப்பது அவன் கண்களை உறுத்திற்று. தந்தையை இழந்த அக்குழந்தைகள் சோழனிடம் அகப்பட்டுக்கொண்டன. தன்பால் சிக்கிய குழந்தைகளின் குளிர்முகம் கண்டும் சோழன் உள்ளம் கனியவில்லை. பாலொழுகும் வாய்க்குழந்தைகள் என்றும் பாராது, அச்செல்வங்களின் தலைகளை மன்றத்தின் முன் கொல்களிற்றின் துணை கொண்டு உருட்டிவிடத் துணிந்தது, இருள் சூழ்ந்த அவன் இகல் நெஞ்சம். அமைச்சரும், சூழ்ச்சித் தலைவரும் அச்சத்தாலோ-இரும்பு நெஞ்சத்தாலோ-வாயிருந்தும் ஊமையராய், கண்ணிருந்தும் குருடராய் வாளாவிருந்தனர். ஊரெல்லாம் இவ்வாறு வாயடைத்து உணர்ச்சியற்றுக் கிடந்த நேரத்தில், ஒரு குரல்-தமிழ்க்குரல்-முழங்கியது. காவிரி நாடு கேட்டுக் கேட்டுப் பழகிய அத்தமிழ்க்குரல்-அறம் மங்கி மறம்.ஒங்கும் வேளையில் எல்லாம், தீமைபோக்கி நன்மை பெருக்கி, வெம்மை நீக்கித் தண்மை கூட்டி