பக்கம்:உணர்வின் எல்லை.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

உணர்வின் எல்லை


அருள் செய்யும் சான்றாண்மையின் குரல்-சங்கொலிபோல முழங்கியது. தன்னலப் பேயனாய் மாறி இருந்த தமிழ் வேந்தன் நெஞ்சில் ஊடுருவிப் பாய்ந்தது, கணையிலும் கூரிய அச் சான்றாண்மைக் குரல்.

ஊர்ப் பொதுவிடத்தில் மன்றத்தின் முன்னே மதிபோன்ற முகம் படைத்த இரு குழந்தைகள்பிள்ளைக் கனியமுதங்கள்-பேசும் பொற்சித்திரங் ள்-இருப்பதைக் கண்டார் கோவூர் கிழார்; தம்மைச் சுற்றி நிற்கும் வெருவத்தக்க தோற்றமுடைய வாள் வீரரைக் கண்டு கலங்கி வெருவி அழுதுகொண்டிருந்த அம் மழலைச் செல்வங்கள், தம்மைக் கொல்ல வரும் களிற்றின் பேருருவினைக் கண்டதும், தமக்கு வரும் துன்பம் இத்தகையது என்று சிறிதும் அறி யாது, அழுகையை மறந்திருக்கும் விந்தைச் செயலை. கல் நெஞ்சையும் கலக்கும் துன்பக் காட்சியைக் கண்டார். கூ டி யி ரு க் கும் மன்றினை மருண்டு மருண்டு காணும் அப் பால்வாய்க் குழந்தைகளின் பார்வையை உற்று உற்று நோக்கினர் புலவர் ; வஞ்சனையற்ற அச்செல்வங்களின் நெஞ்சப் பாங்கை நினைந்து நெய்போல இதயம் உருகினார்; 'வான்மதி போன்ற இச்செல்வங்களின் உயிரையா களிறுகளின் கால் கொண்டு சிதைப்பது! இவ்வாறு எண்ணியவனும் வேந்தனோ! இவன் கொற்றமும் ஒரு கொற்றமோ ! இவன் பிறந்த குடியும் பெருமைமிக்க சோழர் குடிதானே! அங்கோ கொடிது! கொடிது!’ என்று அலமந்தார்; உயிர் துடித்தார்; உள்ளம் குமுறினார். பொங்கி வந்த ஆத்திரத்தை எல்லாம்