பக்கம்:உணர்வின் எல்லை.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலமையும் கருணையும்

79

பைந்தமிழ்ச் சொற்களிலே பக்குவமாக நிரப்பிக் காவலனை நோக்கித் தம் கருத்துரைகளைக் கழறினார்:

மன்னா, நீயோ, புறவின் அல்லல் அன்றியும், பிறவும் உற்ற துன்பம் பலவற்றையும் தீர்த்த சோழனுடைய (சிபியின்) மரபின் தோன்றலாய் உள்ளாய். இக்குழந்தைகளோ, அறிவால் உழுதுண்ணும் கற்றோரது வறுமையைக் கண்டு அஞ்சித் தம்முடைய பொருளைப் பகுத்துண்ணும் குளிர்ந்த நிழலை உடையோராய் வாழ்பவர்களாகிய அருளாளர்கள் மரபில் வந்தவர்கள். இவர்கள் நிலையைச் சற்றே நினைத்துப்பார்! கொல்ல வரும் களிற்றைக் கண்டு ‘நம்மைக் கொல்லவே அது வருகிறது,’ எனவும் அறியாது, அழுகையையும் மறந்து, மன்றத்தை மருண்டு மருண்டு நோக்கும் அக்குழந்தைகளின் மனத்தை எண்ணிப்பார்! அக்கள்ளமற்ற குழந்தைகள் உள்ளத்தே புதுமையானதோர் உணர்வு உள்ளதை உன்னிப்பார்! யான் கூறுவன இவையே. கேட்டனையோ? கேட்டனை ஆயின், இனி விரும்பியவாறு செய்க’.

‘நீயே, புறவின் அல்லல் அன்றியும் பிறவும்
இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை ;
இவரே, புலனுழு துண்மார் புன்கண் அஞ்சித்
தமதுபருந் துண்ணுந் தண்ணிழல் வாழ்நர் :
களிறுகண் டழூஉம் அழாஅல் மறந்து
புன்றலைச் சிறாஅர் மன்றுமருண்டு நோக்கி
விருத்தின் புன்கணோ வுடையார்
கேட்டனை யாயின் தீ வேட்டது செய்யமே!’ (புறம். 46)