பக்கம்:உணர்வின் எல்லை.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

உணர்வின் எல்லை

இறைவன் உறையும் திருக்கோவில்களில் நாடகச் சாலை மண்டபங்களும், மன்னர்கள் வாழும் அரண் மனேகளில் கோயில் நாடக சாலைகளும், ஊர்ப்பொது இடங்களில் அரங்குகளும் காட்சி அளித்தன என் பது புலனுகின்றது.

நமக்குக் கிடைத்துள்ள பழந்தமிழ் இலக்கண நூல்களுள் முழுமையும் விழுப்பமும் வாய்ந்த கலை சிறந்த நூல் தொல்காப்பியமே. அந்நூலுள் அகத் தினைக்குரிய ஒரு சூத்திரம், ‘நாடக வழக்கினும் உலகியல்’ வழக்கிலும் என்றே தொடங்குகிறது. இதி னின்றும் தொகை நூல்கட்கும் முற்பட்ட தொல்காப்பியர் காலத்திலேயே நாடகத் தமிழ் ஏற்றம் பெற்றிருந்தமை எவர்க்கும் புலனாகும். தமிழ்மறையாகிய திருக்குறள், ‘செல்வ நிலேயாமை’யைக் கூற வந்த இடத்தில், ‘கூத்தாட்டு அவைக் குழாத்’தைப் பற்றிக் குறிப்பிடுகிறது.

‘பாடல் ஒர்ந்தும் நாடகம் நயந்தும்
வெண்ணிலவின் பயன்துய்த்துங்
கண் அடைஇய கடைக் கங்குல்

என்ற பட்டினப்பாலை அடிகள், பழந்தமிழ் நாட்டு மக்களின் சமூக வாழ்வைப் படம் பிடித்துக் காட்டுகின் றன. திருவிழாக் காலங்களில் இரவின் முற்பகுதியில் நாடகமாடிவிட்டு, நள்ளிரவில் கண் உறங்கும் கலைஞர்களைப்பற்றிய சொல்லோவியத்தை,

‘விழவின் ஆடும் வயிரியர் மடியப்
பசனுட் கொண்ட கங்குல்.’