பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. ந. பிச்சமூர்த்தி ஒரு சமயம், வெங்கட்ரங்கம் பிள்ளைத் தெருவில் (திருவல்லிக்கேணி) பிச்சமூர்த்தி அவர்களின் வீட்டுக்குப் போயிருந்த சமயத்தில், அவர் அப்போதுதான் ஸ்நானம் செய்துவிட்டுக் குளியலறையிலிருந்து வெளிப்பட்டுக்கொண் டிருந்தார். (என்ன மெலிந்த உடல்!) அவர் கழுத்தில் மாலை யாகத் தொங்குவது கண்டு , நானும் என் பூணுரலை மாலை யாகப் போட்டுக்கொண்டு, வீட்டில் ஒரு வாரம் வளைய வந்தேன். ஆனால், திமிஷமாக அம்மா இதற்கு முற்று வைத்து விட்டாள். என் மனைவியிடம் சொல்லி அனுப்பினாள் : 'அவனை ஒழுங்காயிருக்கச் சொல்லு எனக்கு என் ஈமக் கடன்களுக்கு இன்னும் வேளை வரவில்லை.” இதை அவள் என்னிடம் நேரிடையாகச் சொல்லி யிருக்கலாம். ஆனால் உடனே கீழ்ப்படிய வேண்டிய கட்டனையானால் அது யார் மூலமேனும்தான் வரும். உடனே நிறைவேறியும்விடும், அதுதான் என் அம்மா. எனக்குப் பிச்சமூர்த்தி ஸ்டார். இந்த நாளில் சினிமா ஸ்டார்"கள் ஓங்கியிருந்தால், நான் குறிப்பிட்ட காலத்தில் எழுத்தாளனுக்கு "மவுஸ் கூடியிருந்தது. இத்தனைக்கும் உ-8