பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ந பிச்சமூர்த்தி # 5 தி.ஜ.ர. கனிவுடன், "பிச்சமூர்த்தி என்ன, அவருக்கு மேலாகவே உன்னால் எழுத முடியும், மண்டைக்கனம் காணாமல் இருந்தால், அவரிடம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன." இது நடந்த ஒரு வாரத்துக்குள், மாலை, மெரீனா கடற்கரையில், மணிக்கொடி எழுத்தாளர்கள் கூடிப் பேசு மிடத்தில் பிச்சமூர்த்தியைச் சந்தித்தேன்-இல்லை, பார்த்தேன். பல நாள்கள் நாங்கள் பேசிக்கொள்ளவில்லை. நா எழவில்லை. பிச்சமூர்த்தி, கு.ப.ரா. புதுமைப்பித்தன், சி.சு. செல்லப்பா, தி.ஜ.ர. பி.எஸ் ராமையா, ந, சிதம்பர சுப்ரமணியன், சிட்டி முதலியோர் இருக்கும் இந்த "ஸ்தஸ்"ஸில் நான் யார்?-கோழிக் குஞ்சு, "என்னவோய், பூச்சாண்டி காட்டுகிறீர்களா?" என்று இப்போ கேட்பவர் கேட்கக்கூடும். நண்பனே, அப்படி அன்று. இவர்களைப் பார். இவர்கள் வெறும் எழுத்தாளர்கள் இல்லை. இவர்கள் எழுத்தின் உபாஸ்கர்கள். இவர்கள் பொருளாதாரம் மிக்க நலிவானது. என்றுமே களுவா விருந்ததில்லை. ஏசு, ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் சீடர்கள் போன்று, இவர்கள் எழுத்தின் பைராகிகள். அது காந்தி யுகம். இவர்களுக்கு லகசியங்கள் உண்டு. நாளைச் சூரியனுக்கு நாம் இருக்கிறோமோ இல்லையோ, நாளைக்குச் சூரியன் உண்டு என்கிற திட நம்பிக்கை கொண்டவர்கள். அந்த நம்பிக்கையில் நம்பிக்கைக்காகவே வாழ்ந்தவர்கள், எழுத்தில் ஏதோ தரிசனம் கிடைத்து அதுவே பித்தாய் அலைபவர்கள். எழுத்தில் சம்பிரதாயமான முகப்புகளுக்கு எதிர்நீச்சல் போட்டு, புது முகடுகளைத் தேடி நீந்துபவர்கள்,