பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

点輩56 லா. ச. ராமாமிருதம் சிந்திக்கச் சிந்திக்க, சீண்டல் கூடக்கூட மூடு சூளையில் சுவாரஸ்யமான சாத்தியங்கள் விரிய விரிய...... மடக்கு விசிறியை விசுக்கெனத் திறந்து வெளிப்படும் வர்ண ஜாலங்கள். இந்த வெய்யிலில் உரம் இல்லை. அதன் ஒத்தடத்தில் பொல பொல புலுபுலு நலுநலு இமைத் திரையில் மஞ்சள் கலந்த செந்திட்டு சே ஒரு இழை நரம்பு பிசகினாலும் உடலுக்கு இத்தனை பாடா? எதுவும் கோணாமலிருந்தால், அதுவே ஒரு சுகம். வெட்கப் வெட்கம்! கூடவே ஒரு பெருமிதம் மகிழ்வு. என்ன ? ஏன் ?? மேலே வெள்ளையானைகள் மேய்கின்றன. ஒ டங்கள் தவழ்கின்றன. பாறைகள் சரிகின்றன வெகு நாட்களுக்கு முன்னர்-நீ பிறக்கவில்லை. மியூசியம் கியேட்டரில் ஒரு symphony கேட்டேன். லண்டனி <5055& Orchestra ஸ் குதி கூட்டியாகிறது. இருபது வயலின்: ஜாலர்கள் triangle (டிங் டிங் டிங் ட்ரிங்க்! ட்ரிங்: ட்ரிலிங்!!!) Celios drums, flutes, viola, tranbounes, piano, Ç)&sjib ஏதேதோ பேர் தெரியாது. நூறு? எண்ணியா பார்த்தேன்? நான் அங்கிருந்தவரை உனக்கும். இன்னும் என்னைப் பார்க்க வந்தவர்களுக்கும் வேனது என்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறேன். பேருக்குத்தான் சம்பாஷணை. ஆனால் One way traffic. நான் படமெடுத்து ஆடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தீர்கள். தப்பில்லை. எனக்கும் என் புள்ளி களைக் காட்டச் சந்தோஷம்தான். ஆனால் அதற்குமேலும் என்னைப்பற்றித் ெத ரி ந் து கொள் ள என்ன இருக்க முடியும்?