பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எனக்காக 蜜荔9 அது அது அதனதன் வேளையில் வெளிப்பட்டே ஆக வேண்டும். ஆனால் கள்ளத்தனம் இல்லாததேயில்லை. கடவுள்தான் கள்ளனுக்கும் கள்ளன். எனவே காத்திரு. முது இரவில், நடுக்கடலில் நட்சத்தி ரங்களின் மினுமினு ஒளியில் நீ விரித்த வலையில் அவன் மாட்டிக்கொள்ள, ஆமா, அவன் என்று ஒன்று தனியாகயிருக்கிறானா என்ன? அப்படியிருந்தபடி, அத்தனை தேஹிக்கும் வினியோகம் ஒண்டியாக முடியுமா? ஆனால் அவன் அன்றி ஓரணுவும் அசையாது. துணிலும் இருப்பான் துரும்பிலு மிருப்பான் எல்லாம் தெரிந்தவன் எங்கும் நிறைந்தவன். எல்லாம் முடிந்தவன். ஆனால் அவரவர் விதிப்படி பூர்வ ஜன்மா. பிராரப்தம், சஞ்சிதம்...கர்மா theory... அவன் கிடக்கிறான். என்னைப் புரிந்துகொள்ளத்தான் எனக்கு என் பிறவி. ஒரு துணியைப் பிடித்து இழுத்தால் அத்தனை முடிச்சுக்களும் அவிழ்ந்து கொள்வதுபோல், என்னை நான் புரிந்துகொண்டால், அவனும் புரிபடுவான். புரியாவிட்டால் போகட்டும். 'ட்வீக்! ட்வீக் ட்வீக்' இரண்டு அணில்கள் மரத்தில் ஒன்றையொன்று துரத்துகின்றன. ஒன்று, ஒரு கிளையி விருந்து மேல் கிளைக்கு ஒரு பெரிய தாவல்-அப்பா: tremendous, அதன் ஸாஹஸ்த்தில், அத்துடன் என் ந்ெஞ்சம் தாவி அதன் குழியில் விழுகிறது. ஒரு இழை தப்பினால் அதன் கதி என்ன? (என் கதி என்ன) * இனி இனி கிணி கினி'-சைக்கிள் மணி அலறல், எண்ணத்தின் உச்சரிப்பு மொழி. உன்னோடு என் உள்ள எழுச்சிகளைப் பங்கிட்டுக்கொள்ள மொழி.