பக்கம்:உண்மையின் தரிசனம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 வா. ச. ராமாமிருதம் அப்படிப்பட்ட மனுஷன் வேளை வந்ததும், தாம்பாளத் தில் தட்சணைபோல் உயிரை இவ்வளவு அனாயாசமா 'இந்த எடுத்துக்கோ’ என்கிற மாதிரி...... நிஜப்பரீட்சை எப்போ வருகிறது. எப்படி வருகிறது. வருகிறபோது எப்படி அவனவன் தாக்குப்பிடிக்கிறான்இன்னும் மூடுமந்திரமாய்த்தான் இதில் தோற்பு, ஜெயிப்பு எதிர்பார்க்கிற மாதிரி இல்லை. அம்மன் பலகைக்கு நமஸ்கரிக்கிறோம். கொள்ளுப்பாட்டியிடம் எங்கள் குலதெய்வம் சான்னித்க மானதற்கு அம்மன் பலகைதான் சான்று. பாட்டிக்கு எழுதப் படிக்க வராது புத்தி சூட்சமம் கிடையாது. வஜ்ர சரீரம், ஒரு ஜுரம், தலைவலி என்று ஒரு நாளேனும் அறியாள் முன்கோயக்காரி, ஆனால் பிறர் துன்பம் காணப்பொறாள். சரியான முரடு, தினமும் அர்த்தஜாம தரிசனம் பார்த்துவிட்டுத்தான் சாப்பாடு. அவள் நாளில் அர்த்தஜாமம் இரவு பத்து: பதினொன்று ஆகும். -பிரம்மோத்ஸவத்துக்குக் கொடியேறி இருக்கிறது. பாட்டி , த்வஜஸ்தம்பத்தண்டை தடிஸ்காரம் (ஆண்கள் போல் சாஷ்டாங்கம், அவள் வழக்கம் அப்படித்தான்) பண்ணியெழுந்தவன், திடீரென்று கணிரென்று அவள் குரல், யாகசாலையிலிருந்து கேட்கும் வேத பாராயணத்தில் ஒரு அட்சரம், மாத்திரை பிசகாமல் கலந்தது. என்ன இது, கீழ்த்தெரு கோடிவீட்டு பெந்துவா? ஒரு மண்டலம் பெருந்திரு அம்மன், பாட்டியிடம் விளை பாடினாள் பாட்டி ஆவேசம் கண்டு ஆடவில்லை.