உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உதட்டில் உதடு.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


நாய்ஒன்று அவனைப் பார்த்து
குரைத்தது; ஓடிக் கொண்டான்.
காய்க்காத மாம ரத்தின்
காலடி தன்னில் குந்தி
வாய்ப்பாட்டு பாடிக் கொண்டே
முண்டாசு கட்டிக் கொண்டான்.

அதிரசம் தனை எடுத்தான்
அதில்அவள் உருவம் தோன்ற,
‘புதிதாகப் பார்க்கும் உந்தன்
பார்வைதான் இனிப்பா? இல்லை,
மெதுவான பேச்சா? முத்தம்
வளர்க்கின்ற உதடா?’ என்று
மதிதடு மாற்றத் தோடு
மார்பிலே அணைத்துக் கொண்டான்!

17

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உதட்டில்_உதடு.pdf/19&oldid=1876258" இலிருந்து மீள்விக்கப்பட்டது